பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன் பரிசீலனை கட்டணம் ரத்து 31-ந் தேதி வரை அமல்

பாரத ஸ்டேட் வங்கியில் வீட்டுக் கடனுக்கான பரிசீலனை கட்டணம் 100 சதவீதம் ரத்து செய்யப்படுகிறது.

Update: 2021-07-31 23:51 GMT
கொல்கத்தா, 

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் வீட்டுக் கடனுக்கான பரிசீலனை கட்டணம் 100 சதவீதம் ரத்து செய்யப்படுகிறது. இம்மாதம் 31-ந் தேதி வரை இது அமலில் இருக்கும்.

பாரத ஸ்டேட் வங்கியில் தற்போது 0.40 சதவீத பரிசீலனை கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

‘ஏற்கனவே வீட்டுக் கடன் வட்டி விகிதம் மிகவும் குறைவாக உள்ளநிலையில், மழைக்கால அதிரடி சலுகையாக நாங்கள் அறிவித்துள்ள பரிசீலனை கட்டண ரத்து, வீடு வாங்க நினைப்பவர்களை ஊக்கப்படுத்துவதாக அமையும்’ என்று ஸ்டேட் வங்கி மேம்பாட்டு வங்கியியல் நிர்வாக இயக்குனர் சி.எஸ்.செட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்