கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகள் மத்திய அரசின் உதவியை பெற வேண்டுமா? இணையம் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டுகோள்

கொரோனாவில் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டத்துக்கு (ரூ.10 லட்சம் உள்பட) பி.எம்.கேர்ஸ் நிதியை பயன்படுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த மே 29-ந் தேதி தொடங்கி வைத்தார்.

Update: 2021-08-03 00:27 GMT
புதுடெல்லி, 

கடந்த மார்ச் 11-ந் தேதி முதல் கொரோனா தொற்று காரணமாக பெற்றோர் இருவரையும் அல்லது சட்டப்பூர்வ காப்பாளர்கள் அல்லது தத்தெடுத்த பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டத்துக்கு (ரூ.10 லட்சம் உள்பட) பி.எம்.கேர்ஸ் நிதியை பயன்படுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த மே 29-ந் தேதி தொடங்கி வைத்தார். குழந்தைகளுக்கு முழுமையான அக்கறை அளிக்கவும், குழந்தைகள் நீண்ட காலம் பாதுகாப்பு பெறவும், உடல் நலத்தை காக்க மருத்துவக்காப்பீடு வசதி பெறவும், கல்வி பெறவும் அவர்களது 23-வது வயது வரை இத்திட்டம் உதவுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் உதவிபெற https://pmcaresforchildren.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்