மராட்டிய மாநில சாலைகளை சீரமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு: நிதின் கட்கரி

தொடர் மழையால் சேதமடைந்த மராட்டிய மாநிலத்தின் முக்கிய சாலைகளை சீரமைக்க ரூ. 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-05 08:48 GMT
மும்பை,

தென்மேற்கு பருவமழைக் காரணமாக கடந்த மாதம் மூதல் மராட்டிய மாநிலத்தில் கனமழை பெய்து வருகின்றது. இதனால், அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு முக்கிய சாலைகள் சேதமடைந்துள்ளன.

இதுகுறித்து மத்திய மந்திரி  நிதின் கட்கரி வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

கொங்கன் மற்றும் மேற்கு மராட்டிய பகுதிகளில் பெய்த மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தற்காலிக சீரமைப்பிற்கு ரூ. 52 கோடியும், நிரந்தர சீரமைப்பிற்கு ரூ. 48 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்