அசாமில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்; ஒரே நாளில் 1,120 பேருக்கு தொற்று

அசாமில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக மாலை 6 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-09 18:23 GMT
கவுகாத்தி,

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2வது அலை தாக்கம் குறைந்து வருகிறது. எனினும், அசாமில் தொற்று பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இந்தநிலையில்,  இரு நாட்களுக்கு இந்த பகுதி நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.

அதில், சந்தைகள், கடைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்டவை மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.

மாவட்டங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் மாலையில் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்படும். ஆனால் சரக்கு வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

பொது இடங்களில் 10 பேருக்கு மேல் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். 

சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 

கொரோனா பரவல் குறைவதற்கு ஏற்ப மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாமில் 1,120 புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  1,066 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்.
ஒரே நாளில் 17 உயிரிழந்தாக  அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.  9,749 பேர்
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 5,58,720 பேர் ஆகும். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  5,404 பேர் ஆகும்.

மேலும் செய்திகள்