ஆக்சிஜன் தணிக்கை தேசிய குழு பரிந்துரை மீது எடுத்த நடவடிக்கை என்ன? - மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஆக்சிஜன் தணிக்கை தேசிய குழு பரிந்துரை மீது எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-08-09 23:17 GMT
புதுடெல்லி, 

கொரோனா பாதிப்பு இருந்த காலத்தில் டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. டெல்லிக்கு நாள்தோறும் 700 டன் ஆக்சிஜன் வினியோக உத்தரவை மீறியதற்காக மத்திய அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு விசாரணையை டெல்லி ஐகோர்ட்டு தொடங்கியது.

அதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த அமர்வு, டெல்லி ஐகோர்ட்டின் கோர்ட்டு அவமதிப்பு விசாரணைக்கு கடந்த மே 5-ந்தேதி தடை விதித்தது. மேலும் மாநிலங்களுக்கு வினியோகிக்கப்பட்ட ஆக்சிஜனை தணிக்கை செய்ய தேசிய பணிக்குழுவையும் அமைத்தது. இந்தக்குழு, நாட்டில் பெட்ரோல், டீசல் கையிருப்பை வைத்திருப்பதைப் போல 2 அல்லது 3 வாரங்களுக்கான ஆக்சிஜனையும் கையிருப்பு வைத்திருக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கடந்த ஜூன் 22-ந்தேதி பரிந்துரைத்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆக்சிஜன் தணிக்கைக்கான தேசிய பணிக் குழு பரிந்துரை மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது

மேலும் செய்திகள்