மராட்டியத்தில் புதிதாக 5,560 பேருக்கு கொரோனா தொற்று

மராட்டியத்தில் புதிதாக 5,560 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-08-11 16:25 GMT
மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தகவலை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 5,560 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 63,69,002 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 163 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,34,364 ஆக உயர்ந்துள்ளது.

இதன்மூலம், மாநிலத்தில் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 61,66,620 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 64,570 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மராட்டியத்தில் குணமடைவோர் விகிதம் 96.82 சதவிகிதம். இறப்பு விகிதம் 2.1 சதவிகிதமாக உள்ளது.

மேலும் செய்திகள்