கர்நாடகத்தில் புதிதாக 1,826 பேருக்கு கொரோனா; 1,618 பேர் டிஸ்சார்ஜ்

கர்நாடகத்தில் 22,851 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-11 20:25 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 237 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 1,826 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 29 லட்சத்து 22 ஆயிரத்து 875 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவுக்கு மேலும் 33 பேர் உயிரிழந்தனர்.

இதனால் வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 881 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,618 பேர் குணம் அடைந்தனர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 63 ஆயிரத்து 117 ஆக அதிகரித்துள்ளது. 22 ஆயிரத்து 851 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். 

பெங்களூரு நகரில் 377 பேர், தட்சிண கன்னடாவில் 422 பேர், மைசூருவில் 118 பேர், உடுப்பியில் 130 பேர், சிக்கமகளூருவில் 65 பேர், துமகூருவில் 88 பேர், சிவமொக்காவில் 47 பேர், குடகில் 71 பேர், ஹாசனில் 175 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் 5 பேரும், பெலகாவி, ஹாசன், மைசூருவில் தலா 3 பேரும், சித்ரதுர்கா, குடகு, உத்தரகன்னடா, மண்டியாவில் தலா 2 பேரும் என மொத்தம் 33 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்