டெல்டா பிளஸ் தொற்று பாதிப்பு- மும்பையில் முதல் முறையாக பெண் உயிரிழப்பு

மும்பையில் 63 வயதான பெண்மணி ஜூலை 27-ம் தேதி டெல்டா பிளஸ் வைரசுக்கு பலியானதாக மும்பை நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-08-13 05:58 GMT
மும்பை,

டெல்டா பிளஸ் தொற்று பாதிப்பு இந்தியாவில் பரவியுள்ளது. டெல்டா பிளஸ் வகை கவலையளிக்கும் கொரோனா வகை என்று மத்திய அரசு ஏற்கெனவே கூறியுள்ளது. இந்த நிலையில், மும்பையில் முதல் முறையாக டெல்டா பிளஸ் வைரஸ் உயிரை காவு வாங்கியுள்ளது. 

மும்பையில் 63 வயதுடைய பெண்மணி ஜூலை 27ம் தேதி டெல்டா பிளஸ் வைரசுக்கு பலியானதாக மும்பை நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த 63 வயது பெண் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர், எங்கும் பயணமும் மேற்கொள்ளவில்லை. 

ஆனால் இவருக்கு ஏற்கனவே  நுரையீரல்  பாதிப்பு இருந்துள்ளது. கடந்த  ஜூலை 21ம் தேதி கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. ஜூலை 27-ம் தேதி மரணமடைந்தார்.இவரது வைரஸ் மாதிரிகளின்  மரபணு வரிசையை இப்போதுதான் மும்பை மாநகராட்சி  பெற்றது, அதில் டெல்டா பிளஸ்  மாறுபாடு வைரசே இவரது மரணத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது.

மேலும் செய்திகள்