மராட்டியத்தில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76 ஆக உயர்வு

மராட்டியத்தில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76 ஆக உயர்ந்து உள்ளது.

Update: 2021-08-16 22:07 GMT



புனே,

நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது.  அதிக அளவிலான உயிரிழப்புகளையும் கொண்டுள்ளது.  இந்த நிலையில், கொரோனாவின் புதிய வகை பரவலும் நாடு முழுவதும் காணப்படுகிறது.

நாட்டில் கொரோனாவின் 2வது அலையில் டெல்டா வகை கொரோனா அதிகளவில் பரவியது.  இதன் தொடர்ச்சியாக டெல்டா பிளஸ் வகை கொரோனாவும் கண்டறியப்பட்டு உள்ளது.  இந்நிலையில், மராட்டிய சுகாதார துறை வெளியிட்டு உள்ள செய்தியில், மராட்டியத்தில் புதிதாக 10 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 76 ஆக உயர்ந்து உள்ளது.  அவர்களில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்