சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு: மோடியுடன் பீகார் அனைத்துக்கட்சி குழு இன்று சந்திப்பு

பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று ஐக்கிய ஜனதாதளம் தலைவரும், மாநில முதல்-மந்திரியுமான நிதிஷ் குமார் வலியுறுத்தி வருகிறார். இதை பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிற கட்சிகளும் ஆதரிக்கின்றன.

Update: 2021-08-23 01:10 GMT
இது தொடர்பாக நிதிஷ்குமார் தலைமையில் பீகாரைச் சேர்ந்த அனைத்துக்கட்சி குழுவினர், டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்திக்கின்றனர். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த குழுவில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவரும், பீகார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேஜஷ்வி யாதவ் உள்ளிட்ட 10 கட்சித்தலைவர்கள் இடம்பெறுகின்றனர்.

இதையொட்டி நிதிஷ் குமார் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “10 கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட குழு, பிரதமர் மோடியை டெல்லியில் திங்கட்கிழமை (இன்று) சந்திக்கிறது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்துகிறது” என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்