மேற்கு வங்கத்தில் பிரபல எழுத்தாளர் காலமானார்

கோல்கட்டா-மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் புத்ததேவ் குஹா, 85, உடல்நலக்குறைவால் கோல்கட்டாவில் காலமானார்.

Update: 2021-08-30 22:09 GMT

கொல்கட்டா,

மேற்கு வங்கத்தில் வசித்து வந்த பிரபல எழுத்தாளர் புத்ததேவ் குஹா சில மாதங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 33 நாட்கள் சிகிச்சைக்குப் பின் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.இம்மாத துவக்கத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்படவே மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இரவு திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.புத்ததேவ் குஹாவின் மறைவுக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.குஹா, பல சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதி உள்ளார். 'மதுகரி, நிபேடான்' உள்ளிட்ட அவரது புத்தகங்கள் பல விருதுகளை பெற்றவை.

மேலும் செய்திகள்