ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதல்; 11 பேர் பலி

ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Update: 2021-08-31 04:39 GMT
நகாவுர்,

ராஜஸ்தானின் நகாவுர் பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று லாரி மீது இன்று காலை திடீரென மோதி விபத்து ஏற்பட்டது.  இதில் சிக்கி 11 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதுதவிர 7 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் பிகானிர் பகுதியில் நோக்கா என்ற இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  இந்த விபத்துபற்றி ஸ்ரீபாலாஜி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்