புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-05 00:49 GMT
கோப்புப்படம்,
சென்னை, 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், டெல்டா மாவட்டங்கள், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்