உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டி: ஒவைசி

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கிறது. இதையொட்டி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதின் ஒவைசி நேற்று உத்தரபிரதேசத்துக்கு சென்றார்.

Update: 2021-09-07 20:42 GMT
அயோத்தியில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.

முன்னதாக, லக்னோவில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 100 தொகுதிகளில் போட்டியிடும். கூட்டணி அமைப்பதற்காக சிறிய கட்சிகளுடன் பேசி வருகிறேன். விரைவில் கூட்டணி தெளிவாகி விடும். உத்தரபிரதேசத்தில், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முஸ்லிம்களை ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டன. முஸ்லிம்களின் பரிதாப நிலைக்கு இந்த கட்சிகளே கூட்டுப்பொறுப்பு. பா.ஜனதாவில் 37 சதவீத எம்.எல்.ஏ.க்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்