100 கனிம சுரங்கங்களின் அறிக்கை - மத்திய அரசிடம் இன்று ஒப்படைப்பு

ஏலத்துக்காக 100 கனிம சுரங்கங்களின் அறிக்கையை மத்திய அரசிடம் இந்திய புவியியல் ஆய்வு மையம் இன்று ஒப்படைக்கிறது.

Update: 2021-09-08 02:56 GMT
புதுடெல்லி,

கனிம சுரங்கங்கள் ஒதுக்கீடு மற்றும் குத்தகையில் வெளிப்படையான தன்மையை, ‘சுரங்கங்கள் மற்றும் கனிமங்கங்கள் திருத்தச் சட்டம் 2015’ ஏற்படுத்தியது. புதிய திருத்தத்துடன் ‘தற்சார்பு இந்தியா’ தொலைநோக்கு திட்டத்தை நனவாக்க இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் 100 கனிம சுரங்கங்களை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளது.

இதற்கான 100 அறிக்கைகள் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த அறிக்கைகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் நிலக்கரி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சுரங்கத்துறை இணையமைச்சர் ராவ்சாஹிப் பாட்டீல் தான்வே உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

மேலும் செய்திகள்