பபானிபூர் தொகுதி இடைத்தேர்தல்: செப்.10-ம் தேதி மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல்

பபானிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு செப்டம்பர் 10 ஆம் தேதி முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

Update: 2021-09-08 11:55 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடந்தது. இதில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். 

இருப்பினும் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றதால், மம்தா பானர்ஜி முதலமைச்சரானார். 6 மாதங்களுக்குள் அவர் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்க வேண்டும் என்ற சூழலில், மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலில், பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுவார் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பபானிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு செப்டம்பர் 10 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்