2021-22 நிதியாண்டு: வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

2021-22 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-09-09 15:28 GMT
புதுடெல்லி, 

2020-2021 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தனிநபர்களுக்கு செப்டம்பர் 30-ந்தேதி கடைசி நாள் ஆகும். கம்பெனிகளுக்கு நவம்பர் 30-ந்தேதி கடைசி நாள். இந்தநிலையில், கொரோனா தாக்கம் காரணமாக வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இந்த கால அவகாசத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது.

அதன்படி, 2021-22 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்