கோவாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டுவிட்டது; முதல்-மந்திரி தகவல்

கோவாவில் தகுதியுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுவிட்டது என முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.

Update: 2021-09-09 20:03 GMT
பனாஜி,

கோவா யூனியன் பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இன்று நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கோவாவில் விநாயகர் சதுர்த்தி கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இது தொடர்பாக கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவாவில் விநாயகர் சதுர்த்தி விழா கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கொண்டாடப்படும். 

கோவாவில் தகுதியுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தும் பணிகள் 100 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டது. கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் பணிகளை அக்டோபர் 31-ம் தேதிக்குள் நிறைவு செய்ய கோவா அரசு திட்டமிட்டுள்ளது’ என்றார்.

மேலும் செய்திகள்