மே.வங்காளத்தில் தற்போது உள்ள ஊரடங்கு தளர்வுகள் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு

மேற்கு வங்காளத்தில் தற்போது உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கபட்டுள்ளது.

Update: 2021-09-15 09:19 GMT
கொல்கத்தா, 

மேற்கு வங்காளத்தில் கொரொனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. தற்போது அங்கு தொற்று பாதிப்பு அளவில் கணிசமாக கட்டுப்படுத்தபட்டுள்ளது. புதிதாக தொற்று பாதிப்புக்கு ஆளோவரின் எண்ணிக்கை மூன்று இலக்க எண்களிலேயே உள்ளது. 

தொற்று பரவல் குறையத்தொடங்கியதும், அங்கு விதிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், தற்போது உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை  மக்கள் நடமாடுவதற்கும் வாகனங்கள் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள், சேவகளுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்