தொலைத்தொடர்பு துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி

தொலைத் தொடர்பு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Update: 2021-09-15 11:33 GMT
புதுடெல்லி,

தொலைத் தொடர்பு துறை,  100% அந்நிய நேரடி முதலீடு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய முறைப்படி  ரிசர்வ் வங்கியிடம் துறை ரீதியான  அனுமதி பெறாமல் நேரடியாக முதலீடு செய்யும் வகையில் வழிமுறையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மேலும் புதிய முறைப்படி, அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இருப்பினும், 100 சதவீத தொலைத்தொடர்பு துறையில் நேரடி வழி சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக  49% மேலான முதலீடுகளுக்கு அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்ற விதி இருந்த நிலையில், தற்போது 100 % வரை நேரடி வழி (automatic route) ஒப்புதல் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்