இந்தியாவில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 54.77 கோடியாக உயர்வு

இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 54.77 கோடியாக அதிகரித்துள்ளது.

Update: 2021-09-16 07:13 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்ற இறக்கமாக உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் பரிசோதனை முக்கிய அங்கமாக செயல்படுகிறது. 

பரிசோதனையை தொடர்ந்து அதிகரித்து வைரஸ் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் எண்ணிக்கை 54.77 கோடியாக அதிகரித்துள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 54 கோடி 77 லட்சத்து 1 ஆயிரத்து 729 ஆகும். 

குறிப்பாக, நேற்று ஒரேநாளில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 15 லட்சத்து 79 ஆயிரத்து 761 ஆகும்’ என தெரிவிக்கப்பட்டுளது.

மேலும் செய்திகள்