கொரோனா 2வது அலை உயிரிழப்பு 4 லட்சம் அல்ல 43 லட்சம்; மத்திய அரசு மீது காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு

கொரோனா 2வது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கையை மத்திய அரசு குறைத்து காட்டியுள்ளது என காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

Update: 2021-09-17 07:17 GMT
புதுடெல்லி,

நாட்டில் கொரோனா 2வது அலையில் முதல் அலையை விட அதிக அளவிலான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன.  நாள்தோறும் பதிவாகும் பாதிப்பு எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்து, 4 லட்சம் வரை சென்று அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கொரோனா மேலாண்மையில் பல முறைகேடுகள் நடந்துள்ளன என காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.  இதுபற்றி அக்கட்சியின் செய்தி தொடர்பு நிர்வாகி அஜய் மேக்கன் கூறும்போது, கொரோனா 2வது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கையை மத்திய அரசு குறைத்து காட்டியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) ஆனது கொரோனா தொடர்புடைய உயிரிழப்புகளை குறைத்து காட்டியுள்ளது.  கொரோனா மேலாண்மை முறைகேடுகளை, ஐ.சி.எம்.ஆர். அமைப்பில் பணியாற்றும் மூத்த விஞ்ஞானிகள் சுட்டி காட்டியுள்ளனர்.

அரசு தகவலின்படி, 4,43,497 பேர் உயிரிழந்து உள்ளனர்.  ஆனால், இது தவறு.  உண்மையில் உயிரிழப்பு எண்ணிக்கை 43 லட்சம் இருக்கும்.  அல்லது அதிக அளவாக 68 லட்சம் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்