மத்திய அரசின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரூ. 26,000 கோடி கடன் பத்திரங்கள் ஏலம்

கடன் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் மத்திய அரசின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-17 11:11 GMT
புதுடெல்லி,

மத்திய அரசின் நிதி பற்றாக்குறை நடப்பு நிதி ஆண்டில் 15 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் கடன் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் நிதி பற்றாக்குறை ஈடு செய்யப்படுகிறது. 26 ஆயிரம் கோடி ரூபாயை விட அதிகமாக விருப்ப மனுக்கள் குவிந்தால் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் கூடுதலாக கடன் பத்திரங்கள் வெளியிடப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. 

அதன்படி 2023-ம் ஆண்டு மே 17-ந் தேதி முதிர்ச்சி அடையும் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய கடன் பத்திரங்களுக்கு 4.26 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. 2031-ம் ஆண்டு ஜூலை 12-ந் தேதி முதிர்ச்சி அடையும் 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய கடன் பத்திரங்களுக்கு 6.10 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. அதே போல் 2061-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந் தேதி முதிர்ச்சி அடையும் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய கடன் பத்திரங்களுக்கு 6.76 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்