சித்துவை வெற்றி பெற விடமாட்டேன்: அமரிந்தர் சிங் ஆவேசம்

சித்து முதல் மந்திரி ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் செய்வேன் என பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி அமிரீந்தர்சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-22 14:39 GMT
சண்டிகர்,

சித்து முதல் மந்திரி ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் செய்வேன் என பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி அமிரீந்தர்சிங் தெரிவித்துள்ளார்.

உள்கட்சி பூசல் காரணமாக பஞ்சாப் முதல் மந்திரி பொறுப்பில் இருந்து விலகிய அமரிந்தர் சிங்,  அம்மாநில காங்கிரஸ் தலைவர் சித்து முதல் மந்திரியாக தேர்வு செய்யப்படுவதை தவிர்க்க எந்த தியாகத்தையும் செய்ய தயார் என்று ஆவேசமாக தெரிவித்தார். 

இது தொடர்பாக அமரிந்தர் சிங் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில்  கூறியதாவது:- பஞ்சாப்பிற்கு மிகவும் ஆபத்தானவர் சித்து.  வரப்போகும் சட்டசபை தேர்தலில் சித்து முதல் மந்திரி  ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் நான் செய்வேன். 

சித்துவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவருக்கு எதிராக பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவேன். மூன்று வாரங்களுக்கு முன்பாக நான் ராஜினாமா செய்ய இருப்பதாக கூறிய போது, தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு சோனியா காந்தி என்னை கேட்டுக்கொண்டார். ராகுல் காந்தியும்  பிரியங்கா காந்தியும் அனுபவமற்றவர்கள். அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்” என்றார். 

மேலும் செய்திகள்