இமாசல பிரதேசத்தில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து

இமாசல பிரதேசத்தில் பயணிகள் ரெயில் இன்று காலை தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.

Update: 2021-09-23 09:35 GMT



சிம்லா,


இமாசல பிரதேசத்தில் தொடர் மழை மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.  இந்த நிலையில், நிலச்சரிவால், சில கற்கள் உருண்டோடி வந்து பரோக் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விழுந்துள்ளன.

இந்நிலையில், கல்கா நகரில் இருந்து சிம்லா நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரெயில் ஒன்று இன்று காலை 7.45 மணியளவில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.  ரெயிலில் 9 பயணிகள் இருந்துள்ளனர்.  அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு விட்டனர்.

இதுபற்றி கல்கா-சிம்லா ரெயில்வேயின் தலைமை வர்த்தக ஆய்வாளர் அமர் சிங் தாக்குர் கூறும்போது, மண்டல ரெயில்வே அதிகாரிகளின் உத்தரவின்படி, வாடகைக்கு வாகனங்களை உபயோகித்து சாலை வழியே பயணிகள் அனைவரும் அவர்களுடைய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என கூறியுள்ளார்.



மேலும் செய்திகள்