பஞ்சாப் மாநிலத்திற்கு சித்து பொருத்தமானவர் அல்ல: அமரிந்தர் சிங்

எல்லை மநிலமான பஞ்சாப்பிற்கு சித்து பொருத்தமானவர் கிடையாது என அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-28 11:14 GMT
புதுடெல்லி, 

சித்துவுடன் ஏற்பட்ட மோதல் போக்கை அடுத்து பஞ்சாப் முதல் மந்திரி பதவியில் இருந்து அமரிந்தர் சிங் விலகினார். சித்துவுக்கு தொடர்ந்து கடும் எதிர்ப்பை காட்டி வரும் அமரிந்தர் சிங், சித்துவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவரை தோற்கடிப்பேன் எனவும் கூறியிருந்தார். 

பஞ்சாப் அரசியலில் உள்கட்சி பூசல் நீடித்து வரும் நிலையில், இன்று அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக சித்து அறிவித்துள்ளதார். தனது பதவி விலகல் கடிதத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு சித்து அனுப்பியுள்ளார். பஞ்சாப் காங்கிரசில் ஏற்பட்டு வரும் அடுத்தடுத்த நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், சித்து பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமரிந்தர் சிங், சித்து நிலையானவர் இல்லை எனவும் எல்லை மாநிலமான பஞ்சாப்பிற்கு சித்து பொருத்தமானவர் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். சித்துவுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளது என அமரிந்தர் சிங் ஏற்கனவே விமர்சித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்