‘பண்டோரா பேப்பர்ஸ்’ விவகாரம்: கூட்டுக்குழு விசாரணை - மத்திய அரசு நடவடிக்கை

பண்டோரா பேப்பர்ஸ் விவகாரத்தில், கூட்டுக்குழு விசாரணை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Update: 2021-10-04 21:31 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

வெளிநாடுகளில் இந்தியர்கள் சொத்து குவிப்பு தொடர்பான ‘பண்டோரா பேப்பர்ஸ்’ ஆவண விசாரணையை கண்காணிக்க பல்வேறு விசாரணை அமைப்புகள் அடங்கிய கூட்டுக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. 

மத்திய நேரடி வரிகள் வாரிய (சி.பி.டி.டி.) தலைவர் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம், அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி, நிதி புலனாய்வு பிரிவு உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் இடம்பெறுகிறார்கள். விசாரணை அமைப்புகள் நடத்தும் விசாரணையை இக்குழு கண்காணிக்கும். 

மேலும், உறுதியான விசாரணை நடைபெறுவதற்காக, சம்பந்தப்பட்ட வரி செலுத்துவோர் பற்றிய தகவல்களை வெளிநாட்டு அரசுகளிடம் மத்திய அரசு கேட்டு பெறும். அதன் அடிப்படையில், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்