காஷ்மீர் படுகொலை: அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்த வாய்ப்பு

காஷ்மீரில் பொதுமக்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தப்படும் நிலையில் மத்திய அரசு ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறது.

Update: 2021-10-09 02:32 GMT

புதுடெல்லி,

காஷ்மீரின் ஸ்ரீநகரில் பள்ளியொன்றில் புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டனர்.

கடந்த செவ்வாய் கிழமை 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.  இந்த சம்பவம் நடந்து 48 மணிநேரத்திற்குள் பள்ளி மீது தாக்குதல் நடந்துள்ளது.

கடந்த 5 நாட்களில் பயங்கரவாத தாக்குதல்களில் 7 பேர் வரை படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா கண்டனம் தெரிவித்து உள்ளார்.  இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோர் இன்று கூட்டம் ஒன்று நடத்தி இந்த விவகாரம் பற்றி ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர் என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது.



மேலும் செய்திகள்