கர்நாடகா: குற்றவாளிகளிடம் லஞ்சம் பெற்று வழக்கை முடிக்க முயன்ற 7 போலீசார் சஸ்பெண்ட்

கர்நாடகாவில் கஞ்சா வழக்கில் கைதான 2 பேரிடம் லஞ்சம் பெற்று வழக்கை முடிக்க முயன்ற 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2021-10-11 11:43 GMT
ஹூப்ளி,

கர்நாடகாவின் ஹூப்ளி நகரில் போலீசார் நடத்திய சோதனையில் 2 நபர்கள் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரிடமிருந்து லஞ்சம் பெற்ற போலீசார், அவர்கள் மீது  எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் வழக்கை முடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த  தகவல்கள் உள்ளூர் ஊடகங்களில் வெளியான பிறகு, ஹூப்பள்ளி தார்வாட் போலீஸ் ஆணையர் லபுராம் இது குறித்து விசாரணை நடத்த துணை ஆணையருக்கு உத்தரவிட்டார். துணை ஆணையர் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் உட்பட ஏழு போலீசாரையும் ஆணையர் லபுராம் சஸ்பெண்ட் செய்தார்.

கஞ்சா வழக்கில் கைதான கைதிகளிடமிருந்தே போலீசார் லஞ்சம் வாங்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்