கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,996- பேருக்கு கொரோனா

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,996- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-10-11 13:23 GMT
திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில்  6,996- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 16,576- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,01,419- ஆக குறைந்துள்ளது.  

கேரளாவில் இதுவரை தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 46 லட்சத்து 73 ஆயிரத்து 442 ஆக  உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 66,702- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 84 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 26,342 ஆக  உயர்ந்துள்ளது. 

மேலும் செய்திகள்