திரையரங்குகளை மீண்டும் திறக்க மராட்டிய அரசு முடிவு

அக்டோபர் 22 முதல் திரையரங்குகளை 50 சதவீத பார்வையாளர்களுடன்மீண்டும் திறக்க மராட்டிய அரசு முடிவெடுத்துள்ளது.

Update: 2021-10-12 09:37 GMT
மராட்டியம்,

இந்தியாவில் கொரோனாவானது அனைத்து துறைகளையும் முடக்கிப்போட்ட நிலையில் சினிமா மற்றும் திரையரங்குகளும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் கட்டுக்குள் வந்துள்ளது.

இந்த நிலையில், திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து திரைப்படத் தயாரிப்பாளர் ரோஹித் ஷெட்டி மற்றும் திரைப்படத்துறையை சேர்ந்தவர்களால் கடந்த மாதம் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து அக்டோபர் 22 முதல்  சினிமா திரையரங்குகளை மீண்டும் திறக்க மகாராஷ்டிரா அரசு இன்று நடைமுறைகளை வெளியிட்டது. 

அதன்படி திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படும். மேலும் பார்வையாளர்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற அரசின் வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுள்ளது.

மேலும் செய்திகள்