கர்நாடகத்தில் அரசு பள்ளி, கல்லூரிகளில் நாட்டு நலப்பணி திட்ட அமைப்பு - மந்திரி அஸ்வத்நாராயண் தகவல்

கர்நாடகத்தில் அனைத்து அரசு பள்ளி, கல்லூரிகளிலும் நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பை தொடங்குவது கட்டாயம் என உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-12 18:15 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் இன்று கர்நாடக அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் நாட்டு நலப்பணித்திட்டம் (என்.எஸ்.எஸ்.) ஆற்றியவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது அவர் பேசியதாவது:-

“என்.எஸ்.எஸ். அமைப்பில் சேவையாற்றிய கர்நாடகத்தை சேர்ந்த 4 பேருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இது பெருமை அளிக்கும் விஷயமாகும். சமூக வளர்ச்சிக்கு நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பு அளிக்கும் பங்களிப்பு மிகப்பெரியது. இந்த நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பு, தேசிய மாணவர் படை ஆகிய சேவைகள் பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்தது. 

புதிய தேசிய கல்வி கொள்கையில், அந்த சேவைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பை கட்டாயம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.”

இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.

மேலும் செய்திகள்