கேரளாவில் பெய்து வரும் கனமழை, நிலச்சரிவால் பலர் உயிரிழந்த நிகழ்வு வேதனை அளிக்கிறது - பிரதமர் மோடி

கேரளாவில் பெய்து வரும் கனமழை, நிலச்சரிவால் பலர் உயிரிழந்த நிகழ்வு வேதனை அளிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2021-10-17 12:04 GMT
புதுடெல்லி,

கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், இடுக்கி மற்றம் கோட்டயம் மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 19 பேர் உயிரிழந்தனர். சபரிமலை கோவிலுக்கு இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே  கேரளா மாநிலம் கோட்டயம், இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.  கோட்டயத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 12 பேரும், இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேரும் உயிரிழந்தனர்.  பூவஞ்சி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 23 பேரில் இதுவரை 17 பேர் உயிருடன் மீட்கபட்டுள்ளனர்.  மேலும் நிலச்சரிவில் சிக்கி பலி எண்ணிக்கை உயரக்கூடும் என கூறப்படுகிறது.

இந்தநிலையில் கேரளாவில் பெய்து வரும் கனமழை, நிலச்சரிவால் பலர் உயிரிழந்த நிகழ்வு வேதனை அளிக்கிறது என்றும்  முதல்-மந்திரி பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாநிலத்தில் கனமழை, நிலச்சரிவு பாதிப்பு  நிலவரம் குறித்து கேட்டறிந்தேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். தொடர்ந்து 

காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ களத்தில் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். அனைவரும்  பாதுகாப்புடன் இருக்கவும் மற்றும் நலமுடன் இருக்கவும் நான் பிரார்த்திக்கிறேன் என டுவிட்டரில்  பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்