உத்தரகாண்டில் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது: ராகுல் காந்தி

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த இடைவிடாத மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம்-நிலச்சரிவால் 34-பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2021-10-20 10:31 GMT
புதுடெல்லி,

மலைப்பிரதேசமான உத்தரகாண்டில் கனமழை கொட்டி தீர்த்தது.  இடைவிடாமல் கொட்டிய கனமழையால் நைனிடால்  மாவட்டம் வெள்ளக்காடானது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் உத்தரகாண்டில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். 

வெள்ள பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- உத்தரகாண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

 உத்தரகாண்டில் நிலமை இன்னும் மோசமாகவே உள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுங்கள். மீட்பு பணியில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு காங்கிரஸ் கட்சியினருக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்