கர்நாடகத்தில் இன்று 464 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்

கர்நாடகாவில் தற்போது 8,891 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-23 16:05 GMT
பெங்களூரு, 

கர்நாடகா மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் புதிதாக 378 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29,85,227 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,995 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 464 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,38,312 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் தற்போது 8,891 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்