லடாக்கில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

லடாக்கில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.

Update: 2021-10-24 12:29 GMT
லே,

லடாக் யூனியன் பிரதேசத்தில் கார்கில் பகுதியில் இன்று காலை 11.29 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 என்ற அளவில் பதிவாகியிருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து சுமார் 140 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதிகளில் எந்த சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்