தயக்கம் காட்டும் மக்களை தடுப்பூசி போட வைப்பது சவலானது: மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி

தயக்கம் காட்டும் மக்களை தடுப்பூசி போட வைப்பது சவாலானது என சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.

Update: 2021-10-24 20:31 GMT
தயக்கம்

நாடு முழுவதும் 100 கோடிக்கும் அதிகமாக தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. மராட்டியத்திலும் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடந்து வருகிறது. மாநிலத்தில் 9 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் தடுப்பூசி போட தயக்கம் காட்டும் மக்களை, ஊசி போட வைப்பது அரசுக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பதாக சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.

சவாலான பணி

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘மாநிலத்தில் 70 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டுகின்றனர். அவர்களை தடுப்பூசி போட வைப்பது சுகாதாரத்துறைக்கு சவாலான பணியாக உள்ளது. பூஸ்டர் டோஸ் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் இதுவரை வழிகாட்டுதல்கள் எதையும் வெளியிடவில்லை. எனவே இந்த விவகாரத்தில் மாநில அரசு முடிவு எடுக்க முடியாது." என்றார்.

மேலும் செய்திகள்