மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 46.58 புள்ளிகள் குறைவு

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 46.58 புள்ளிகள் குறைந்து 60,775 புள்ளிகளாக உள்ளது.

Update: 2021-10-25 04:50 GMT
மும்பை,

மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும் இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் குறியீடு 46.58 புள்ளிகள் குறைந்து 60,775.04 புள்ளிகளாக உள்ளது.  இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 21.9 புள்ளிகள் குறைந்து 18,093 புள்ளிகளாக உள்ளது.

இவற்றில், ஐ.சி.ஐ.சி.ஐ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்டவற்றின் பங்குகள் லாப நோக்கத்துடன் காணப்படுகின்றன.  

கோடக் மஹிந்திரா வங்கி, ஹச்.டி.எஃப்.சி வங்கி, பாரதி ஏர்டெல், டி.சி.எஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், இன்போசிஸ் ஆகியவற்றின் பங்குகள் நஷ்டத்தில் உள்ளன.

மேலும் செய்திகள்