டெல்லியில் சாலை விபத்து: ஒருவர் உயிரிழப்பு
டெல்லியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். 3 பேர் காயமடைந்து உள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியின் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று டெம்போவுடன் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். குடிபோதையில் இருந்த கார் ஓட்டுனரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.