கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவிப்பு

கர்நாடகாவில் கொரோனா தொற்று கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தில் 254-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது

Update: 2021-11-05 09:22 GMT
பெங்களூரு,

நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு சீராக சரிந்து வருவது மக்களுக்கு  நிம்மதியை கொடுத்துள்ளது. தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால், கொரோனா உச்சத்தில் இருந்த போது விதிக்கப்பட்ட பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. சில கட்டுப்பாடுகள் மட்டுமே இருந்து வருகின்றன.

 அந்த வகையில்,  கர்நாடகாவில் அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கை அம்மாநில அரசு இன்று ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இது குறித்து கர்நாடக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில்,  மாநிலத்தில் இதுவரை அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்