மாநிலங்களிடம் 15.69 கோடி தடுப்பூசி கையிருப்பு: மத்திய அரசு தகவல்

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 15.69 கோடி தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2021-11-06 19:54 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

கொரோனாவுக்கு எதிரான தேசிய தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு தொடர்ந்து கொரோனா தடுப்பூசியை வினியோகித்து வருகிறது.

அப்படி இதுவரை 116.54 கோடி தடுப்பூசிகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பயன்படுத்தியது போக மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 15.69 கோடி தடுப்பூசி கையிருப்பாக உள்ளன. இதை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

மேலும் செய்திகள்