கொரோனா பிடியில் இருந்து விடுபட்டு விட்டோம்: கவர்னர்கள் மாநாட்டில் அமித்ஷா

மத்திய-மாநில அரசுகள் கூட்டாக போராடி கொரோனா பிடியில் இருந்து விடுபட்டு விட்டதாக கவர்னர்கள் மாநாட்டில் அமித்ஷா தெரிவித்தார்.

Update: 2021-11-11 21:14 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

கொரோனாவின் பிடியில் இருந்து ஏறத்தாழ விடுபட்டு விட்டோம் என்று கவர்னர்கள் மாநாட்டில் அமித்ஷா கூறினார்.

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நேற்று கவர்னர்கள் மாநாடு நடைபெற்றது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது மாநாட்டில் பேசிய அமித்ஷா, “பிரதமர் மோடி தலைமையில், மாநிலங்களுடன் இணைந்து கொரோனாவுக்கு எதிராக வெற்றிகரமாக போராடினோம். ‘ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே மனம்|’ என்ற சிந்தனையுடன் போராடினோம்.

முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி 20 ஆலோசனை கூட்டங்களை நடத்தினார். கவர்னர்களுடனும் பல்வேறு கூட்டங்களை நடத்தினார். இந்தியா எப்படி போராடியது என்பதை பார்த்து உலகமே பாராட்டியது. 110 கோடி டோஸ் தடுப்பூசிக்கு மேல் போட்டுள்ளோம். இதன் பலனாக, கொரோனா பிடியில் இருந்து நாடு ஏறத்தாழ விடுபட்டு விட்டது என்று அவர் பேசினார்.

மேலும் செய்திகள்