மணிப்பூரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

மணிப்பூரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியானவர்களின் உயிர் தியாகம் என்றும் நினைவில் நிற்கும் என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Update: 2021-11-13 15:47 GMT
புதுடெல்லி,

 மணிப்பூர் மாநிலத்தில் மியான்மார் எல்லையை ஒட்டிய சூராசந்த்பூர் மாவட்டத்தில் ராணுவ அதிகாரி மற்றும் அவர்களுக்கு பாதுகாப்புக்காக வந்த வாகனத்தைக் குறிவைத்து இன்று காலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் கர்னல் ரேங்கில் உள்ள அதிகாரி, அவரது மனைவி மற்றும் 7 வயது மகன் அவர்களுடன் பாதுகாப்புக்குச் சென்ற அசாம் ரைஃபில்ஸ் படை வீரர்கள் என 7- பேர் இந்தத் தாக்குதலில் பலியாகினர். இந்தச் சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு  பயங்கரவாத  அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “ மணிப்பூரில் அசாம் ரைபில்ஸ் படையினர் மீது  பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை வண்மையாகக் கண்டிக்கிறேன். 

இதில் உயிரிழந்த வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களின் குடும்பத்தாருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப்பதிவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்