திரிபுரா: வீட்டு வசதி திட்ட பயனாளிகளுக்கு ₹700 கோடியை பிரதமர் வழங்குகிறார்

திரிபுராவின் கிராமப்புற வீட்டு வசதி திட்ட பயனாளிகளுக்கு ₹700 கோடியை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.

Update: 2021-11-14 06:32 GMT
கோப்புப்படம்
அகர்தலா,

நாட்டில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் நாட்டில் அனைவருக்கும் சொந்த வீட்டினை அரசு நிதியின் மூலம் வழங்குவதை மோடி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் வீட்டுவசதி திட்ட இலக்கை அடைவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின் திட்டத்தின் முதல் தவணையை பிரதமர் நரேந்திர மோடி திரிபுராவின் 1.47 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு இன்று வழங்குகிறார். பிரதமர் அலுவலகம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ₹700 கோடிக்கு மேல் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று கூறியது.

கடந்த ஆண்டு, மத்திய அரசின் முதன்மையான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புற) திட்டத்தின் கீழ், வடகிழக்கு மண்டலம் மற்றும் மலைப்பாங்கான மாநிலங்கள் பிரிவில் திரிபுராவில் பல்வேறு மக்களுக்கு புதிய வீடு கட்டுவதற்கு நிதி அளிக்கப்பட்டது. தற்போது அதே பிரிவின் ​​கிராமின் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் உள்ள பயனாளிகளின் வாழ்க்கையை அரசு மேம்படுத்தி வருகிறது.

மேலும் செய்திகள்