போயிங் நிறுவனத்திடம் இருந்து 72 புதிய விமானங்களை வாங்கும் இந்தியாவின் ‘ஆகசா ஏர்’ நிறுவனம்

போயிங் நிறுவனத்திடம் இருந்து 72 புதிய விமானங்களை வாங்க இந்தியாவின் ‘ஆகசா ஏர்’ நிறுவனம் ஆர்டர் செய்துள்ளது.

Update: 2021-11-16 13:37 GMT
புதுடெல்லி,
 
இந்தியாவில் ’ஆகசா ஏர்’ என்ற பெயரில் புதிதாக விமான நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த விமான நிறுவனம் செயல்பட முதற்கட்ட அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. குறைந்த செலவில் விமான பயணத்தை வழங்கும் வகையில் ‘ஆகசா ஏர்’ செயல்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த விமான நிறுவனத்திற்கு இந்தியாவின் கோடிஸ்வரர்களில் ஒருவரான ராகேஷ் ஜுங்ஜூங்வாலா முதலீடு செய்துள்ளார். ‘ஆகசா ஏர்’ அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 'ஆகசா ஏர்’ நிறுவனம் பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் இடமிருந்து புதிதாக 72 ‘போயிங் 737 மேக்ஸ்’ ரக விமானங்களை வாங்க ஆர்டர் செய்துள்ளது. 

மேலும் செய்திகள்