3 வேளாண் சட்டங்களும் வாபஸ் - பிரதமர் மோடி அறிவிப்பு

3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார்.

Update: 2021-11-19 03:55 GMT
புதுடெல்லி,

மத்திய அரசு கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரில் புதிதாக 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். 

அவர்கள் வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒராண்டிற்கு மேலாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கும் திரும்பபெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்