சென்னை சென்ட்ரல் - திருப்பதி ரெயில் சேவை இன்று ரத்து

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம், ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துள்ளது.

Update: 2021-11-20 04:52 GMT
ஐதராபாத்,

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம், ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் ரேனிகுண்டா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி வரை செல்லும் விரைவு ரெயில்கள் (16203,16204) இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்