டெல்லி: மெட்ரோ ரயில்கள், பேருந்துகளில் பயணிகள் நின்று செல்ல அனுமதி

காற்று மாசுபாட்டை சமாளிக்க டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு.

Update: 2021-11-20 21:06 GMT
கோப்புப்படம்
டெல்லி,

தலைநகர் டெல்லியில் பல மாதங்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான அளவில் உள்ளது. வாகன நெரிசல், அண்டை மாநிலங்களில் பயிர் கழிவுகளை எரித்தல் உள்பட பல்வேறு காரணங்களால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிலேயே இருந்து வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் அதிகரிக்கும் காற்றுமாசினை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நகரில் மக்கள் வாகனங்களை உபயோகிப்பதை பெருமளவில் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டது.

மக்கள் தங்கள் சொந்த வாகனங்களை உபயோகிப்பதை குறைத்துக்கொண்டாலும், அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அரசின் போக்குவரத்தை பயன்படுத்த முடியும்.  டெல்லியில் மெட்ரோ ரயில்கள் மற்றும் பேருந்துகளில் கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு முதலில் 50 சதவீத இருக்கைகள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில்,  கூட்ட நெரிசலைக் குறைக்க  நூறு சதவீதம் அமர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

தற்போது காற்றுமாசு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தனியார் வாகனங்களின் பயன்பாட்டினை குறைக்க, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் மெட்ரோ ரயில்கள், பேருந்துகளில் பயணிகள் நின்று செல்ல அனுமதி அளித்துள்ளது.

மேலும் செய்திகள்