கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு “மஞ்சள்” எச்சரிக்கை

கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

Update: 2021-11-22 04:57 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் வடகிழக்கு பருவமழை காரணமாக மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தம் உருவாகி உள்ளது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

இதன்காரணமாக கேரளாவின் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் இன்று முதல் 25-ந்தேதி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபோல மலையோர மாவட்டங்களிலும் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நாளையும், நாளை மறுநாளும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த மாவட்டங்களுக்கும் அரசு மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்