சத்தீஷ்கரில் பெட்ரோல், டீசல் மீதான ’வாட்' வரி குறைப்பு

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சத்தீஷ்கரில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-22 14:55 GMT
ராய்பூர், 

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சமீபத்தில் குறைத்தது. இதையடுத்து, 1 லிட்டர் பெட்ரோலுக்கு 5 ரூபாய்; டீசலுக்கு 10 ரூபாய் குறைந்தது. மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான 'வாட்' வரியை குறைக்க வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தியது. 

இதைப்பின்பற்றி பாஜக ஆளும் மாநிலங்களில் உடனடியாக வாட் வரி குறைக்கப்பட்டன. பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களும் வாட் வரியை குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளன. 

இந்த நிலையில், சத்தீஷ்கரில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சத்தீஷ்கர் முதல்வர் அலுவலகம் பூபேஷ் பாகல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ மக்களின் சுமையை குறைக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க சத்தீஷ்கர் அரசு முடிவு செய்துள்ளது. 

டீசல் மீதான வாட் வரியில் 2 சதவீதமும், பெட்ரோல் மீதான வாட் வரியில் 1 சதவீதமும் குறைக்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ரூ. 1 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்